Yuththam Seyyap Purappatuvoem

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யுத்தம் செய்யப் புறப்படுவோம் – நாம்
யுத்தம் செய்யப் புறப்படுவோம்
1. ஆவியிலே நிரம்;பிடுவோம்
அபிஷேகம் பெற்றிடுவோம்
2. விசுவாசக் கேடயத்தை
கையிலே ஏந்திடுவோம்
3. இறை வார்த்தை வாளேந்தியே
எதிரியை வென்றிடுவோம்
4. கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் நமக்கு வேண்டாம்
5. எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவைத் தகர்த்திடுவோம்
6. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்