Yuthavin Sengol medley song lyrics

யூதாவின் செங்கோல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை விட வேர் யாரிடம் பின்னே செல்வேனைய்யா
நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் உள்ளதைய்யா
வேதனையோ சோதனையோ இன்பங்களோ துன்பங்களோ //
எதுவும் பிரிக்காதைய்யா இயேசுவின் அன்பைவிட்டு //
ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை உண்மையோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ////
இராமுழுதும் பிரயாசப்பட்டேன் ஒன்றும் அகப்படவில்லை //
ஆகிலும் உந்தன் வார்த்தையின் படியே //
வலையை விரிக்கின்றேன்
உமக்காய் ஊழியம் செய்ய தினமும் வாஞ்சிக்கிறேன் //
சோதனைப்பாதையிலே சோர்ந்து வாடுகின்றேன் //
பயத்தோடும் நடுக்கத்தோடும் கர்த்தாவே நான் ஜெபிக்கனுமே //
உம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போது அபிஷேகம் இறங்கனுமே//
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எங்கள் பரலோக ராஜாவே
இந்த வானம் பூமி உள்ளோர் யாவும் உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே //
உமது கோபத்தால் பூமி உருகி நதியாய் ஓடுகின்றதே
உமது கோபத்தால் காற்றும் கடலும் ஜனங்களை அழிக்கின்றதே
நீர் மாத்திரம் மெய்யான தேவன்…
இந்த வானம் உம் சிங்காசனம் இந்த பூமி உம் பாதபடி //
என்னிலே ஒன்றும் இல்லையைய்யா
எல்லாம் உங்க கிருபையய்யா //
உங்க கிருபை தான் என்னை வாழவைக்குது
உங்க கிருப தான் என்ன பாடவைக்குது