yoopu-17 – Job-17
யோபு-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யோபு-17 – Job-17
1. என் சுவாசம் ஒழிகிறது; என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
2. பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
3. தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
4. நீர் அவர்கள் இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
5. எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
6. ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.
7. இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
8. சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
9. நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
10. இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.
11. என் நாட்கள் போயிற்று, என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
12. அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.
13. அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
14. அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப்பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
15. என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
16. அது பாதாளத்தின் காலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.
yoopu-17 – Job-17
1. en suvasam ozhikirathu; en natkal mutikirathu; pirethakkuzhi enakku aayaththamayirukkirathu.
2. pariyasampannukiravarkal ennitaththil illaiyoo? avarkal seyyum aniyayangkalai en kan parththukkontirukkirathu.
3. thevareer en kariyaththai melpoottukkontu, enakkakap pinaippatuveeraka; vere yar enakkuk kaikotukkaththakkavar?
4. neer avarkal iruthayaththukku nyanaththai maraiththeer; aakaiyal avarkalai uyarththathiruppeer.
5. evan than sinekitharukkuk ketakath thurookam pesukiranoo, avan pillaikalin kankalum pooththuppookum.
6. janangkalukkulle avar ennaip pazhamozhiyaka vaiththar; avarkal mukaththukkumun nan aruvaruppanen.
7. ithinimiththam en kankal sanysalaththinal irulatainthathu; en avayavangkalellam nizhalaippoolirukkirathu.
8. sanmarkkar itharkakap piramipparkal; kurramillathavan mayakkaranukku viroothamaka ezhumpuvan.
9. neethiman than vazhiyai uruthiyayp pitippan; suththamana kaikalullavan menmelum palaththuppoovan.
10. ippoothum neengkal ellarum pooyvarungkal; ungkalil nyanamulla oruvanaiyum kanen.
11. en natkal pooyirru, en iruthayaththil enakku untayiruntha sinthanaikal arruppooyirru.
12. avaikal iravaip pakalakkirru; irulai velissam thotarnthuvarum enru ennasseythathu.
13. appati nan kaththukkontirunthalum, pathalam enakku veetayirukkum; irulil en patukkaiyaip pootuven.
14. azhivaipparththu, nee enakkuth thakappan enkiren; puzhukkalaipparththu, neengkal enakkuth thayum enakkus sakoothariyum enkiren.
15. en nampikkai ippoothu engke? nan nampiyirunthathaik kanpavan yar?
16. athu pathalaththin kalukkul irangkum; appoothu thoolil ekamay ilaipparuvoom enran.