Yesuvin Samoogam Eththanai Aanantham song lyrics

இயேசுவின் சமுகம் எத்தனை ஆனந்தம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவின் சமுகம் எத்தனை ஆனந்தம்
இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்கு ஆனந்தம்
இன்பம்(2)உள்ளமெல்லாம் இன்பம் கொள்ளுதே
பொங்கி (2) பாத்திரம் நிரம்பி வழியுதே
புரண்டு (2) சமாதானம் நதியாய் பாயுதே
உருண்டு (2) பாவ பாரம் ஓடி மறையுதே
கேட்க (2) வேதம் விசுவாசம் பெருகுதே
நினைக்க (2) கல்வாரியின் அன்பு பெருகுதே
பேச (2) அன்னிய பாஷை பக்தி பெருகுதே
பாட (2) பரிசுத்தாவி நிறைவு பெருகுதே
ஜெபிக்க (2) மலைகளும் அசைந்து போகுதே
துதிக்க(2) சத்துரு கோட்டை இடிந்து வீழ்குதே
இயேசு (2) என்ரோகம் எல்லாம் தொலையுதே
இயேசு (2) இரத்தம் இரத்தம் சுத்தமாக்குதே
சகிக்க (2) பாடுகளை பலன் பெருகுதே
சுமக்க (2) சிலுவைதனை சொர்க்கம் திறக்குதே
கொள்ள (2) ஆத்ம பாரம் மீட்பு பெருகுதே
சொல்ல (2) சுவிசேஷம் அற்புதம் விளங்குதே
ஊற்றும் (2) வாக்குத்தத்த பின்மாரி ஊற்றும்
வாரும் (2) வல்லமை விளங்கவே வாரும்
தாரும் (2) ஆவியின் வரங்களைத் தாரும்
போடும் (2) பரிசுத்த அக்கினி போடும்