yesuvin pinnalae

இயேசுவின் பின்னாலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. இயேசுவின் பின்னாலே மண்ணாசைகளும் மாய்த்து
நேசமுடன் - போவோம்
ஜோதியுயர் நாதனுடன்
ஜோதிலோகம் நின்றிடலாம் - போவோம்
2. பரலோகம் விட்டுப் பாவிகள் மீதன்புற்றார்
நரர் பரம் செல்ல நல்வழி திறந்திட்டார்
பரா பரன்
3. பாவங்களை நீக்கிப் பரிகரிக்க என்னைப்
பாவக் கோலமாகிப் பரனின் சுதன் தன்னை
மாய்த்தனரே
4. பரிசுத்தராகப் பாரிலும் ஒன்று கூடி
பரலோகம் செல்லப் பரிசுத்தாவி தந்தார்
மா அன்புதான்
5. பொய்யுலகம் வேண்டாம் இயேசையனெனக் கெல்லாம்
தூயசாலேம் செல்வோம் இயேசையனடி சென்றால்
ஐயமின்றி
6. மனம் மாறிடாதோர் மரணமடைவாரே
தினந்தோறும் தீயிற்றியங்கி அழுவாரே
திரும்புவீர்
7. இருதய சுத்தம் இருந்திடில் நித்தம்
வரும் நாளில் இயேசு நாம் வானிலொன்றுகூடி
வாழ்ந்திடலாம்