Yesuvin Kiristhuvin Namamithae Inimaiyamae song lyrics

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே
இன்பமதுவே ஏழைக்கும் ஆறுதலே
நாமம் அதிசயமே தேவதாசரின் புகலிடமே
நானிலந்தனிலே யாவரும் வணங்கிடவே
நாதன் இயேசுவின் நாமமதையே
நன்றியுடன் புகழ்வோம்
அளிப்பேன் யாவையுமே
என் நாமத்தில் என்றனரே – அழிக்க
வலியவனை வல்லமையுண்டதிலே
களிப்போம் வல்ல நாமமதிலே
கனிந்தே பாடிடுவோம்
நோய்கள் நீக்கிடவும்
நவ பாஷைகள் பேசிடவும்
சர்ப்பங்களை எடுக்க சக்தி ஈந்ததுவும்
உத்தமர்கள் போற்றிப் புகழும்
கர்த்தரின் நாமமதே
சாவுக்கேதுவான கொடும்
நஞ்சதைப் பருகிடினும்
சேதப்படுத்தாதே காக்க வல்லதுவே
நாதன் ஈந்த தைலமெனவே
நமக்காய் ஊற்றுண்டதே
5.பாவ இருளதனை போக்கும்
புண்ணிய நாமமதாய் – பாரில்
இறங்கினாரே தேவனின் அன்பிதுவே
இயேசு கிறிஸ்து நேசரிவரே
ஆசைக்குகந்தவரே