yesuvin anbu inaiyatta

இயேசுவின் அன்பு இணையற்ற

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவின் அன்பு இணையற்ற அன்பு
நேசித்து உன்னை அழைக்கிறார் வா
1. பாசமாய் உன்னை மார்பினில் அணைத்து
தாய் போல உன்னை தேற்றிடுவார்
உனக்காகவே அவர் காயங்கள் ஏற்றார்
கைவிடாதுன்னை காத்திடுவார்
2. தனிமையில் வாடும் உனக்கவரே துணை
வெறுமையான உன்னில் ஜீவநதி அவர்
வசந்தம் உன் வாழ்வில் பூத்து குலுங்குமே
தாமதம் ஏனோ அழைக்கிறார் வா
3. இருளான வாழ்வை ஒளியாக மாற்றும்
நீதியின் சூரியன் அவரல்லவா
கவலைகள் மாறும் கர்மங்கள் தொலையும்
கனவான வாழ்வு நனவாகுமே