Yesuvil Nilaithirunthaal Miguthiyana Song Lyrics

இயேசுவில் நிலைத்திருந்தால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவில் நிலைத்திருந்தால்
மிகுதியான கனி கொடுக்கலாம்
இயேசுவில் நிலைத்திருந்தால்
அவர் சீஷன் என்று பெயர் பெறலாம்
அனுபல்லவி
நான் அவரிலும் அவர் வார்த்தை என்னிலும்
நிலைத்திருந்தால் நித்திய மகிழ்ச்சி
எந்நாளும் அனுபவிக்கலாம்
பல்லவிகள்
1.ஒருவருமே அழிந்து போகாமல்
நித்ய வாழ்வை பெற்றுக் கொள்ளவே
தேவன் தம் குமாரனை தந்தார்
அந்த அன்பிலே நிலைத்திருப்போமே
2.வானம் பூமி ஒழிந்து போகுமே
அவர் வார்த்தை என்றும் ஒழிவதில்லையே
ஜீவ வார்த்தையை கைக்கொண்டு
பாறையில் அடிஸ்தானமிடுவோமே
ஆதியிலே ஆதாம் இழந்த தேவ உறவை
இயேசு மீட்டாரே இயேசுவின் நிலைத்து
வாழ்ந்திட ஜெப தியானங்கள்
தொடர்ந்திடட்டுமே.