yesuve nee enakku pothum

இயேசுவே நீர் எனக்கு போதுமானவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவே நீர் எனக்கு போதுமானவர்
பொன்னைக் காட்டிலும் மண்ணைக் காட்டிலும்
இயேசுவே நீர் எனக்கு போதுமானவர்
1. வெள்ளியினாலுமல்ல
பொன்னினாலுமல்ல - உந்தனின்
இரத்தத்தாலே நீதிமானாக்கினீரே
2. கண்ணீரின் பாதையிலே
நடந்த வேளைகளில் - அழாதே என்று
சொல்லி கண்ணீரை துடைத்தவரே
3. நிந்தைகள் அவமானங்கள்
சூழ்ந்த நேரங்களில் - எந்தனின்
கரம்பிடித்து பாசமாய் தேற்றினீரே
4. உம்மைப் போல் எந்தனையே
மாற்றும் நேசத்தையே - எண்ணி
எண்ணி தினம் உந்தனை துதித்திடுவேன்