Yesuvai pola yarumillai

இயேசுவை போல யாரும் இல்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவை போல யாரும் இல்லை
என் வாழ்வினில் இனிமேல் எது தொல்லை – (3)
சரணங்கள்
1) உலகத்தலே நான் தள்ளப்பட்டேன்
மனுஷராலே நான் வெறுக்கப்பட்டேன் – அ.அ.ஆ – (2)
இயேசுவாலே நான் பிடிக்கப்பட்டேன்
மனுஷரின் நடுவிலே நான் உயர்த்தப்பட்டேன் – இந்த
2) கடன் தொல்லை கஷ்டங்கள் வந்ததய்யா
என் இயேசுவின் கிருபையாலே மறைந்ததய்யா – அ.அ.ஆ – (2)
ஏழை என்று இயேசு என்னை தள்ளவில்லை
பாவி என்று இயேசு என்னை வெறுக்கவில்லை
3) ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவந்தேன் – நான்
பாடாத பட்டும் எல்லாம் பாடிவந்தேன் – அ.அ.ஆ – (2)
தேடாத தெய்வமெல்லாம் தேடிசென்றேன்
தேடிவந்த இயேசுவை நான் பாடவந்தேன் –
என்னை என் வாழ்வினில் இனிமேல் ஏது தொல்லை
இயேசு இருக்கின்றபோது ஏது தொல்லை