Yesuvai Pol Oru Nesar Illai

இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை
இயேசுவைப் போல் ஒரு நண்பன் இல்லை
இயேசுவே உந்தன் நேசரே
இயேசுவே உந்தன் மீட்பரே-2
வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றாயே
ஓடிவா நீ இயேசுவிடம்
நானே உனக்கு சமாதானம்
நானே உனக்கு ஆறுதல்
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2
உந்தன் தந்தை தாயும் கைவிட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்-2
நானே உன்னை சேர்த்துக் கொள்வேன்
நானே உன்னை ஆதரிப்பேன்
கலங்காதே திகையாதே என்றாரே
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2
உன் வாழ்வில் கசப்புகள் கலந்திட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்
மாராவின் நீரை மதுரமாக
மாற்றின தேவன் நான் என்றார்
மாறாதவர் உன்னை அழைக்கிறார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2