yesu sendra paathai

இயேசு சென்ற பாதை இடுக்கம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு சென்ற பாதை இடுக்கம்
இவர் வாழ்ந்த வாழ்வெல்லாம் ஒழுக்கம்
பசி தாகம் உற்ற தேகம்
ருசி பார்த்து கசந்த காடிபானம் எம்மை
நேசித்தீந்த உயிர் தானம்
பச்சை மரத்திற்கே இந்தப் பாடு
பட்ட மரத்திற்கு என்ன பாடோ
இந்த துன்பம் எந்தன் சொந்தம் இயேசு
தொங்கும் சிலுவை எந்தன் தஞ்சம்
எனக்காய் அழாதே என் ஜனமே
உனக்காய் வினைக்காய் அழு என்றார்
அனுதாபம் ஒன்றும் வேண்டாம்
அவர் மீட்பை தேடிக் கொள் போதும்
தாய் கோழி குஞ்சுகளையும்
தன் சிறகின் கீழ் கூட்டிச் சேர்க்கும்
அதுபோல அணைக்கின்றார்
அவர் அன்பில் மூழ்கி இணைவோமே