Yesu Rathame Rathame

இயேசு இரத்தமே விலையேறப் பெற்ற
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

இயேசு இரத்தமே! இரத்தமே! இரத்தமே!
விலையேறப் பெற்ற இரத்தமே!
குற்றமில்லா பரிசுத்த இரத்தமே!
மகா கொடூர பாவங்கள் கழுவிடும்
நம் இயேசுவின் இரத்தமே!
மன வியாகுல வேதனையால்
வேர்வை இரத்தமாய் வெளி வந்ததே
மனசாட்சியை சுத்திகரித்திடும்
நம் இயேசுவின் இரத்தமே!
மன வேதனை நீக்கிடுமே
சாபமெல்லாமே போக்கிடுமே
மகா பரிசுத்த ஸ்தலமதில் பேசிடும்
நம் இயேசுவின் இரத்தமே!
மகா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன்சென்ற பரிசுத்தரே!