Yesu Raja Varapogirar

இயேசு ராஜா வரப்போகிறார்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Yesu Raja Varapogirar – இயேசு ராஜா வரப்போகிறார்
இயேசு ராஜா வரப்போகிறார்
எக்காள ஆர்பரிப்போடு-2
இயேசுவுக்குள் வாழ்ந்திருப்போம்
அன்போடு சேர்த்துக்கொள்வார் – நம்மை -2 – இயேசு ராஜா
1.இதுவரை நாம் செய்த பாவமெல்லாம்
நம் இயேசு நமக்காக சுமந்து கொண்டார்-2
அவரின் இரத்ததாலே கழுவப்பட்டோம்-2
பரலோக வாழ்வை நாம் அடைந்துவிட்டோம்-2 – இயேசு ராஜா
2.அவர் பாதம் அமர்ந்து நாம் ஜெபித்திடுவோம்
அந்தகார வல்லமையை ஒழித்திடுவோம்-2
துதி கண மகிமையை செலுத்திடுவோம்-2
துன்பம் தரும் சாத்தானை விரட்டிடுவோம்-2 – இயேசு ராஜா
3.உலகத்தின் இன்பங்களில் திசைதிருப்பும்
பாவமான செயல்களை தரவிர்த்திடுவோம்-2
நித்திய ஜீவனை பெற்றிடவே-2
அன்பராம் யேசுவோடு இணைந்திடுவோம்-2 – இயேசு ராஜா