Yesu Piranthare Poovinil Lyrics

இயேசு பிறந்தாரே பூவினில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இயேசு பிறந்தாரே பூவினில்
மகிழ்ச்சி தந்தாரே வாழ்வினில்
மானிடரே நாம் பாடுவோம்
ஆடி பாடி கொண்டாடுவோம்
தூதர் வானில் தோன்றினர்
மன்னன் பிறப்பை பாடினார்
நீயும் அவரை தொழுவாயே
நித்தம் மகிழ்ச்சி பெறுவாயே
மானிடரே நாம் பாடுவோம்
ஆடி பாடி கொண்டாடுவோம்
மேய்ப்பார் பிள்ளையை கண்டனர்
அளவில்லா மகிழ்ச்சி கொண்டனர்
நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்
உன் வாழ்வில் மகிழ்ச்சி பெற்றுக்கொள்வாய்
மானிடரே நாம் பாடுவோம்
ஆடி பாடி கொண்டாடுவோம்