Yesu Paatham Enakkup Pothum

இயேசு பாதம் எனக்குப் போதும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)
1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்
2. இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்
3. காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்
4. கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய
5. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு
6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்
இயேசு பாதம் எனக்குப் போதும் பாடல் வரிகள், Yesu Patham Enaku Pothum Lyrics