yerusaleme yerusaleme naan

எருசலேமே எருசலேமே நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எருசலேமே எருசலேமே நான்
உன்னை எப்படி மறப்பேன்
உலகின் முத்தே உன்னதரின்
சொத்தே இரட்சகரை அருளினீரே
நான் உன்னை மறந்தால்
என் வலது கரம்
என் தொழிலை மறப்பது போல்
கர்த்தரின் கண்களும் இருதயமும்
எருசலேமே என்றும்
உன்னில் உள்ளதே
பரிசுத்த நகரமே எருசலேமே
நீ கர்த்தரின் சிங்காசனம் உனக்கு
விரோதமாய் யுத்தம் செய்பவர்
கர்த்தரின் கோபத்தால் அழிந்திடுவார்
எருசலேம் நகருக்காய் ஜெபிப்பவர்கள்
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவார்
கடைசி நாளில் கர்த்தரின் பாதம் உன்
ஒலிவமலைமேல் வந்து நிற்குமே