Yennaiya Avar Alaikkiraar

என்னையா அவர் அழைக்கிறார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முதல் பாகம்
என்னையா அவர் அழைக்கிறார்? – கிறிஸ்து
இயேசுவா என்னை அழைக்கிறார்?
1 இன்னுமா அவர் இரக்கம் கொள்கிறார்?
ஈனன் என்றன் பேரிலா?
பண்பிலாக் கொடும் பாவி மீதிலா?
பாதை தவறிடும் போதிலா? – என்னையா
2 அன்பினுக்கோர் அளவும் இல்லையோ?
அதன் ஆழம் அகலம் இயேசுவோ?
பின்தொடர்பவர் பரமன் மைந்தரோ?
பிழைகள் பொறுத்திடும் மீட்பரோ? – என்னையா
இரண்டாம் பாகம்
என்னைதான் அவர் அழைக்கிறார்? – கிறிஸ்து
இயேசு தான் என்னை அழைக்கிறார்?
-தி. தியானந்தன் பிரான்சிஸ்