yekoovayeere, en thunaiyalare

யெகோவாயீரே என் துணையாளரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யெகோவாயீரே, என் துணையாளரே,
எல்லாமே பார்த்துகொள்வீர்,
எனை மீட்க்கவே, நீர் பலியானீரே,
உம் மார்பில் என்றும் நான் இளைப்பாறுவேன் -(2)
ஆராதனை, ஆராதனை,
எந்நாளும் ஆராதனை,
ஆராதனை, ஆராதனை,
வழுவாமல் காக்கும் என் இயேசுவுக்கே.
1) நீர் பலியானதால், நான் ஜீவன் பெற்றேன்,
உம் ரத்ததால், நான் உமதானேனே,
உம்மில் நானும், என்னில் நீரும்,
நிலைத்திட ஏங்குகின்றேன் -(2) ….(ஆராதனை)
2) உம் வலக்கையினால் என்னை தாங்குகின்றீர்,
உம் இடக்கையினால், என்னைச் சேர்த்துக் கொண்டீர்,
திராட்ச்சை ரசம் பார்க்கிலும், மதுரம் தானே,
உம் மறுரூப(மாறாத) நேசம் ஒன்றே -(2) ….(ஆராதனை)
யெகோவாயீரே என் துணையாளரே பாடல் வரிகள், Yehovah Yireh En Thunaiyalare Lyrics