yekoova nisi neere neer enthan ataiyalame

யெகோவா நிசி நீரே நீர் எந்தன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யெகோவா நிசி நீரே நீர் எந்தன் அடையாளமே
யெகோவா நிசி நீரே நீர் தானே பரிசுத்தரே
தூயரே தூயரே துதிக்குப் பாத்திரரே
1. பாவத்தை பார்க்காத சுத்தக்கண்ணன் நீர்
பாவியை நேசிக்கும் தூய கர்த்தர் நீர்
பாவி என்று வந்தோரைத் தள்ளிடார்
மன்னிக்கும் வள்ளல் கண்டேன் உம்மிலே.
2. உப்பரிக்கை மேல் உலகத்தைக் காணாமல்
உப்பரிக்கை மேல் உம்மை காண வேண்டும்
எழுந்து ஜொலிக்கும் விளக்காக மாற வேண்டும்
உம் ஆவி நித்தம் என்னில் இறங்க வேண்டும்
3. காட்டத்தி மரத்தின் காயாக வேண்டாமே
கர்த்தர் கரத்தின் கனியாக வேண்டுமே
சகேயு போல இறங்கி வர வேண்டும்
இயேசு என்னோடு வாசம் பண்ண வேண்டுமே