Yegova Mephalti

யேகோவா மெஃபல்டி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யேகோவா மெஃபல்டி
என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே
யேகோவா மெஃபல்டி
என் இரட்சண்ய கன்மலை நீரே
ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையே
வலக்கரம் நீட்டி விடுவித்தீரே-2
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்-2
-யேகோவா மெஃபல்டி
1.எத்தனை அதிகாரம் எழும்பின போதும்
கர்த்தர் விடுவித்தீரே
சத்துருவின் சேனை சூழ்ந்த போதும்
கர்த்தர் விடுவித்தீரே
ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்
எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே-2
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2
2.மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்
கர்த்தர் விடுவித்தீரே
பாதாள வல்லமைகள் எழும்பினபோதும்
கர்த்தர் விடுவித்தீரே
கைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும் கன்மலையின் கர்த்தர் நீரே-2
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2-யேகோவா மெஃபல்டி