Yavum Seidhu Mudipar Enakaga

யாவும் செய்து முடிப்பார் எனக்காக
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாவும் செய்து முடிப்பார் எனக்காக
யுத்தம் செய்து ஜெயிப்பார் என் இயேசு
1. உலகத் தோற்றமுன்னே எனக்காக
தம்மையே தானமாகத் தந்தார் -2
உலக சிருஷ்டிப்பில் எனக்காக
யாவையும் செய்து முடித்தார்
2. கல்வாரிச் சிலுவையில் எனக்காக
இரத்தத்தைத் தியாகமாக ஈந்தார்
பாடுகள் வேதனைகள் எனக்காக
பொறுமையாய் சகித்தாரே
3. நித்திய ராஜ்யத்தில் எனக்காக
யாவையும் செய்துமே முடித்தார்
வானவரோடென்றும் வாழ்ந்திடவே
கிருபையின் வாசலைத் திறந்தார்