yarumillatha pathaiyil nan – Yaarumillatha Paathaiyil Naan

யாருமில்லாத பாதையில் நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாருமில்லாத பாதையில் நான் – Yaarumillatha Paathaiyil Naan
யாருமில்லாத பாதையில் நான் போகிறேன்
துணையில்லாத வாழ்க்கையை நான் வாழ்கிறேன்
இன்பம் கானலாகி ஆனபோதெல்லாம்
இயேசு அன்பு இன்பம் ஆகிப்போனதே
மறவேனே….. உம்மை நான் மறவேனே
என்னாலும் உம்மை நான் மறவேனே – 2
தகப்பனை போல தாங்கிடும் அன்பு இல்லை என்றால் நான் என்னாவேன்
தாய்மடி போல ஆறுதல் தந்த உன் அன்பு இல்லை என்றால் என் செய்வேன்..
நான் தடம் மாறின வேளை உன் கரம் தாங்கியதே
நான் மனம் சோர்கின்ற வேளை
உன் கரம் தேற்றியதே
உம்மை நானும் நினைக்காமல் தினம் தினம் நான் நிந்தித்தேன்
என் தவறை நினைக்காமல் உன் பிள்ளையை நீ சந்தித்தீர்
அப்பா அப்பா உந்தன் அன்பு தான் எந்தன் வாழ்க்கை ஆனதே
மறவேனே உம்மை நான் மறவேனே
என்னாலும் உம்மை நான் மறவேனே…2