yarum kana un ninthanaikal

யாரும் காணா உன் நிந்தனைகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாரும் காணா உன் நிந்தனைகள்
என் கண்கள் மட்டும் கண்டதே
உடைக்கப்பட்ட பாத்திரம் நீ
குயவன் கரம் உன்னை தேடுதே
என் பிரியமே என் சொந்தமே
உன் நிலைமையை நான் மாற்றுவேன்
நானே உந்தன் தேவன் அல்லோ
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்
ஆழமாய் பதித்திருக்கிறேன்
நீ இருக்கும்போல் உன்னை ஏற்றுக்கொண்டு
உன் பாரங்கள் நான் சுமக்கிறேன்
உன் கண்ணீரே என் நினைவில் கொண்டு
உன் சார்பில் நான் வழக்காடுவேன்
சாம்பலை சிங்காரமாய்
உன் அழுகையை களிப்பாக்குவேன்-2
நானே உந்தன் தேவன் அல்லோ
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்
ஆழமாய் பதித்திருக்கிறேன்
யார் மறந்தாலும்
நான் மறவேனோ
உறவுகள் பிரிந்தாலும்
நான் பிரிவேனோ
நானே உந்தன் தேவன் அல்லோ
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்
ஆழமாய் பதித்திருக்கிறேன்