yaritam nan solluven – Yaridam Nan solluven

யாரிடம் நான் சொல்லுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாரிடம் நான் சொல்லுவேன் – Yaridam Nan solluven
யாரிடம் நான் சொல்லுவேன்
என் இதயம் நீரின்றி யார் எனக்கு
யாரிடம் நான் உடைப்பேன்
என் தைலம் நீரின்றி யார் எனக்கு
உம் பாதம் அமர்ந்தால்
நான் எல்லாம் மறப்பேன்
உம் அன்பு ஒன்றை தவிர
உம் பாதம் அமர்ந்தால்
உம் முகம் ஒன்றை பார்ப்பேன்
வேறென்ன வேண்டும் எனக்கு
என் பாரங்கள் என் தேவைகள்
உம் சமுகத்தில் வைப்பேன்
என் கண்ணீரின் முத்த துளிகளால்
உம் சமுகத்தை நனைப்பேன் – 2
வாழ்வின் பாரமெல்லாம்
சுமக்க தெரியாத
என்னை அன்பால் சுமப்பார்
முட்கள் குத்தும் போது
கண்ணீர் வடிக்கும் போது
முத்தத்தால் எல்லாம் துடைப்பார்
உணர்ந்தேன் தேவ காதல் இது
திகைத்தேனே என்ன அன்பு இது
துடித்தேனே என்ன அன்பு இது
உம் பாதம் அமர்ந்தால்
நான் எல்லாம் மறப்பேன்
உம் அன்பு ஒன்றை தவிர
உம் சமுகத்தை நினைத்து
நான் உலகத்தை மறப்பேன்
வேறென்ன வேண்டும் எனக்கு
என் பாரங்கள் என் தேவைகள்
உம் சமுகத்தில் வைப்பேன்
என் கண்ணீரின் முத்த துளிகளால்
உம் பாதத்தை நனைப்பேன் – 2