yarenum ennai yarenru – Yarenum ennai Yarentru

யாரேனும் என்னை யாரென்று

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாரேனும் என்னை யாரென்று – Yarenum ennai Yarentru
யாரேனும் என்னை
யாரென்று கேட்டால்
கிருபையால் சொல்வேன்
இயேசுவின் பிள்ளை
இதைச்சொல்ல எனக்கு தகுதியில்ல
(இயேசு) மகளே என்றழைத்தால் தகுதிபெற்றேன்
கருவினில் என்னை தெரிந்ததினாலே
தெளிந்தே சொல்வேன்
நீரே என் அன்னை
இதைச்சொல்ல எனக்கு தகுதியில்ல
(இயேசு) மகளே என்றழைத்தால் தகுதிபெற்றேன்
தோள்களின் மேலே சுமந்ததினாலே
தொய்வின்றி சொல்வேன்
நீரே என் தந்தை
இதைச்சொல்ல எனக்கு தகுதியில்ல
(இயேசு) மகளே என்றழைத்தால் தகுதிபெற்றேன்
கூடவே வருகிறீர்
தோற்றாலும் தொடர்கிறீர்
காலமும் சொல்வேன்
நீரே என் துணைவன்
இதைச்சொல்ல எனக்கு தகுதியில்ல
(இயேசு) மணவாளன் அழைத்ததால் தகுதிபெற்றேன்
இயேசுவின் பிள்ளை – Yesuvin Pillai