yaar unnai kaivittalum

யார் உன்னை கைவிட்டாலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யார் உன்னை கைவிட்டாலும்
இந்த பார் உன்னை எதிர்த்தாலும்
உனக்குள் இருப்பவர் பெரியவர் மனமே
உணர்ந்திடுவாய் நீ இதை தினமே
1. உனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
ஒன்றுக்கும் உதாவது உணர்வாய் நீ மனமே
கர்த்தர் உன் நடுவில் இருக்கின்றார்
கடைசி வரையில் தீங்கில்லையே
2. தமக்கு பயந்தவர் கூப்பிடும்போது
தடையின்றி வருவார்
தடைகளை அறுப்பார்
முன்னறிந்து அழைத்த தேவன்
முடிவு வரையும் நடத்திடுவார்.
3.உன்னை விட்டு விலகாத தேவன்
கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுவார்
இக்கட்டில் உன்னை தாங்கும் தேவன்
இரக்கம் காட்டி அரவணைப்பார்
4. பயப்படாதே நீ சீயோனே
அதிசயம் செய்பவர்
மகிமையாய் வருவார்
கர்த்தரையன்றி தேவன் உண்டோ?
கலங்க காரணம் ஏதுமில்லை