what a Friend we have in Jesus

என்னே எந்தன் நண்பர் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

what a Friend we have in Jesus
1.என்னே எந்தன் நண்பர் இயேசு
எல்லாப் பாவம் துக்கமும்
என் சுமைகள் எல்லாம் நீரே
ஏற்றுக் கொண்டீர் ஜெபத்தில்
நாம் ஏன் சமாதானம் அற்று
வேதனையில் ஆழ்ந்துள்ளோம்
கர்த்தர் மேல் நம்பிக்கை இன்றி
ஜெபம் செய்ய மறந்தோம்!
2.சோதனை, வேதனை மிஞ்சி
பாடுகள் பெருகிடின்
பக்தி, சக்தி வீழ்ந்திடாமல்
கர்த்தரை நோக்கி ஜெபி
உண்மை நண்பர் நம்மில் என்றும்
துன்பம் தாங்கி நிற்கிறார்
இயேசு நம் ஆவல் அறிவார்
கர்த்தரை நோக்கி ஜெபி
3.நாம் ஏன் சோர்பு, துயரம் என்று
பாரம் தாங்கி நிற்கிறோம்?
மீட்பர் நம் புகலிடமே
கர்த்தரிடம் ஓடி வா
நண்பர் உன்னை மறந்தாரோ
கர்த்தர் ஜெபம் கேட்கிறார்
அவர் கைகள் என்றும் காக்கும்
அவரில் ஆறுதல் காண்போம்
என்னே எந்தன் நண்பர் இயேசு பாடல் வரிகள், Enne Enthan Nanbar Yesu Lyrics