vizhunthu poonathai etuppippar

விழுந்து போனதை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விழுந்து போனதை எடுப்பிப்பார்
பாழானதை புதுப்பிப்பார் நிர்முலமானதை
தேவன்திரும்பக் கட்டுவார் (2)
CHORUS:
அவரே மூலைக்கல்
அவரே தலைக்கல்
அவரே அஸ்திபாரக்கல்
அவரே விலையேறப்பெற்றகல் [2]
நெரிந்த நாணலை நிமிர்த்திடுவார்
மங்கும் திரியை அவர் அனல் மூட்டுவார்
கோணலானதை செவ்வையாக்குவார்
கரடு முரடானதை சமமாக்குவார்..(2)
அவரே மூலைக்கல்
அவரே தலைக்கல்
அவரே அஸ்திபாரக்கல்
அவரே விலையேறப்பெற்றகல் [2]
விழுந்து போனதை… [2]
வெண்கலக் கதவை உடைத்திடுவார்
இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவார்
[சிறை] அஸ்திபாரங்களை தகர்த்திடுவார்
மலைகள் குன்றுகளை தாழ்த்திடுவார் ‌[2]
அவரே மூலைக்கல்
அவரே தலைக்கல்
அவரே அஸ்திபாரக்கல்
அவரே விலையேறப்பெற்ற கல் [2]
விழுந்து போனதை… [2]
அவரே மூலைக்கல்
அவரே தலைக்கல்
அவரே அஸ்திபாரக்கல்
அவரே விலையேறப்பெற்ற கல் [4]