Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு – Viyathiyin Mathiyil nee ezhumbidu
வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே
யெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2
கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்
என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2
வருங்காலங்களிலும் நீர் இருப்பீர்
எழும்பி வரும் புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும் அலைகள் மேலே
உம் பாதத்தின் சுவடுகளே
புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரே
நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த
வியாதியே உன் தலை குனிந்ததே
என்மேலே உன் ஆளுகை முடிந்ததே
என்னை எதிர்க்கக்கூடிய எது
ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும்