vitiyuma ena kaththirukkiren – Vidiyuma Ena Kaathirukiren

விடியுமா என காத்திருக்கிறேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren
விடியுமா என காத்திருக்கிறேன்
இருள் விலகுமா என ஏங்குகிறேன் -2
என் இதய வேதனைகள் மாற
என் இதய வேதனைகள் தீர
இயேசுவே உம்மை நோக்குகிறேன் -2 விடியுமா
1.காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போனதைய்யா
பார்த்திருந்து எதிர் பார்த்திருந்து ஏங்குகின்றேன் இயேசைய்யா
நான் எதிர் பார்க்கும் நல்லதோர் முடிவை எனக்கு தாரும் இயேசுவே -2 விடியுமா
2.மாறுமா என் சோகங்கள் ஆறுமா என் காயங்கள்
உடைந்து உம்மை நோக்குகிறேன்
வேறு வழியில்லை இயேசைய்யா -2
இடிந்த என்னை எடுத்து கட்டும்
இழந்த அனைத்தையும் திரும்ப தாரும் -2 விடியுமா
3.உம்மை நோக்கிடும் மனிதரென்றும் வெட்கப்பட்டு போவதில்லை
உம்மை சாரும் மனிதரென்றும் சரிந்து போவதில்லை ஐயா-2
வீழ்வெனென்று நினைத்தவர் மத்தியில் தலைநிமிர்ந்து வாழ செய்யும் -2
விடிந்திடும் என காத்திருக்கிறேன்
இருள் விலகிடும் என நம்புகிறேன்
என் இதய வேதனைகள் தீர்ந்திடும்
என் இதய வேதனைகள் தீர்ந்திடும்
இயேசுவே உம்மை நோக்குவதால்
இயேசுவே உம்மை நம்புவதால்