vithaiththa vithaiyai mulaikka seypavar – Vidhaitha Vithaiyai mulaikka seibavar

விதைத்த விதையை முளைக்க செய்பவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar
பல்லவி
விதைத்த விதையை முளைக்க செய்பவர் இயேசு
விதைக்க நீ செல்வாயா நீ விதைத்த விதையை காப்பவர் இயேசு
நீ அவருக்காய் விதைப்பாயா
விதைக்க நீ செல்வாயா
உன்னை அவருக்காய் விதைப்பாயா
சரணம்-1
உனக்கு கொடுத்தது ஒரு வாழ்வு அதை உனைக்கே வாழ்வாயா
உலகம் தருகின்ற ஆடம்பரத்தில் நீ மயங்கி கிடப்பாயா
உனக்காய் மரித்தவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா (விதைத்த)
சரணம்-2
அந்தகார இருளுக்குள்ளே வாழ்ந்ததை நினைத்து பாரு
ஆச்சரியமான ஒளியின் இடத்தில் அழைத்து வந்தது யாரு
உனக்காய் மரித்தவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா -2 (விதைத்த)
சரணம் – 3
இயேசுவுக்காய் ஓடிய பவுல் வெட்க பட்டதும் இல்லை
தன் ஜீவனுக்காய் இடறிய சௌல் நிலை நிற்க வில்லை
உனக்காய் மரித்தவர் இயேசு
நீ அவருக்காய் விதைப்பாயா – உன்னை அவருக்காய் விதைப்பாயா 2 (விதைத்த)