vithaiththa vithaikal mulaikkum – Vithaitha Vithaigal Mulaikkum

விதைத்த விதைகள் முளைக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விதைத்த விதைகள் முளைக்கும் – Vithaitha Vithaigal Mulaikkum
விதைத்த விதைகள் முளைக்கும்
உலகத்தை பலனால் நிரப்பும்
அறுத்த அரிகள் நிமிரும் பூத்து காய்த்துக் குலுங்கும்
பலன் பலன்-இது
பிரதிபலன்
முத்தாய் ஜொலிக்கும்
முதற்பலன்
1) தேவன் கொடுக்கும் பலன்கள் எல்லாம் தாமதமாகாது -அது
தரமும் குறையாது
அமுக்கி குலுக்கி நிறைவான
பலனை திரும்ப தந்திடுவார் – பலன் பலன் (2)
2) முளைக்க வைக்கும் வல்லமை எல்லாம்
பூமியை பிளந்திடுமே- அது சவாலை தகர்த்திடுமே
அழுது கொண்டே சுமந்து வந்தோம்
ஆர்ப்பரிப்போடே திரும்பிடுவோம் – பலன் பலன்