1.vitamal anaikkum anpe!

விடாமல் அணைக்கும் அன்பே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.விடாமல் அணைக்கும் அன்பே!
என் சேர்ந்த ஆன்மா உம்மில் ஆறும்,
நான் பெற்ற வாழ்வை மீண்டும் ஈவேன்;
அன்பின் ஆழியில் கலந்து,
ஜீவாறாய் மாறுவேன்.
2.நீரே என்னைத் தொடரும் ஜோதி,
படைத்தேன், மங்கிடும் என் தீபம்;
நீர் மூட்டும் அருள் ஜோதியாலே
அழகின் ஒளி பெறுவேன்,
சுடராய்த் திகழ்வேன்.
3.துன்பத்தில் தேடும் இன்பமே!
என் உள்ளம் உமக்காய்த் திறந்தேன்.
மா மழையில் வான்வில்லைக் கண்டேன்.
உம் வாக்கு மெய் என்றறிவேன்;
காலையில் களிப்பேன்.
4.நல் மீட்பரின் சிலுவையே!
உன்னை விட்டோடத் துணியேன்,
வாழ்வின் மகிமை குப்பை, நீத்தேன்;
அழிவில்லா விண்லோக வாழ்வை
நான் கண்டடைவேன்.