vitai theriyatha un vazhkkai tholainthathoo

விடை தெரியாத
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விடை தெரியாத உன் வாழ்க்கை தொலைந்ததோ
தடைகளை எண்ணி உன் உள்ளம் கரைந்ததோ
உன்னை காக்க தேவன் பிறந்தார்
உந்தன் பாவம் போக்க பிறந்தார்
கடுங்குளிரில் பனிமழையில் தோன்றினார்
உலகறிய மனுகுலமாய் தோன்றினார்….
மேகங்களாய் சூழுகின்ற பாடுகள் எழுவது இயல்பு
அவை தீர்வதற்கு உன் வாழ்வுதனை
அவரிடம் தருவது தீர்வு
பாவங்கள் சோகங்கள் மாறி மாறி உன்னை வதைக்குமே
அவர் பிறந்தது உன்னை மீட்கவே
உன் வாழ்க்கை இனிதாக முடியுமே
அவர் நாமமே உன் வாழ்க்கையில் ஒளி வீசுமே
அவர் வார்த்தைகள் நம் உள்ளத்தை மாற்றுமே….
விண்வெளி வானில் ஒளிர்கின்ற மீன்கள்
உலகிற்கு அவரை காட்டியதே
அவர் துதிபாட அவரன்பை காண எனதுள்ளம்
தினம் தினம் ஏங்கியதே
வாழும் காலம் யாவும் உமக்கே
எந்தன் உள்ளம் தந்திடுவேன்
உமது பிறப்பை நாளும் எண்ணி
உமக்கு நன்றி கூறிடுவேன்
எனக்காய் பிறந்தவரே என் பாவம் சுமந்தவரே
உண்மையாய் உம்மில் வாழ்கிறேன் உம்மை துதிக்கிறேன்….
நன்மைகள் பல கிருபைகள் உம்மில் காண்கிறேன்