visuvasa kappalile payanaththai – Visuwasa Kappalilae Payanathai

விசுவாச கப்பலிலே பயணத்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விசுவாச கப்பலிலே பயணத்தை – Visuwasa Kappalilae Payanathai
விசுவாச கப்பலிலே
பயணத்தைத் தொடர்கிறேன்
எதிர் காற்று வீசினாலும்
புயல்காற்று துரத்தினாலும்
பயப்படேன் நான் என் கர்த்தர் என்னோடு
1.காற்றை அதட்டி கடலை அமர்த்தி
இரைச்சலை அமரச்செய்தீர்
கூடவே பயணம் செய்து
ஆபத்தில் துணையானீரே-(விசுவாச கப்பலிலே)
2.நான் உன்னை விட்டு விலகுவதில்லை
கைவிடுவதுமில்லை
என்று வாக்குரைத்தீரே
என்னோடு இருக்கிறீரே-(விசுவாச கப்பலிலே)
3.பெலவீன நேரம் பெலப்படுத்தும்
வல்லமையின் ஆவியே
சத்தியத்தின் ஆவியே
விடுதலை தருபவரே-(விசுவாச கப்பலிலே)