Visuvaasatthinaal Neethimaan Pilaippaan

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்-

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே – 2
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே – 2
1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்து கொள்வார்
2. பெரும் நோய்தனில் கலங்கிடாதே
பாசத்தால் உன்னை சோதிப்பாரே
திமிர்வாதத்தால் அசைவற்றவன்
தேவ தயவினால் நடக்கலையோ?
3. பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும் போது
நீ மகிழ்ந்து களி கூரு
விண் கைமாறு மிகுதியாகும்
4. தேவன் கைகளும் குறுகிடாதே
தேவ வாக்குகள் மாறிடாதே
கண்கள் தூங்காது தினம் காத்திடும்
கர்த்தர் ஒருபோதும் கைவிடாரே
5. கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் பாடல் வரிகள், Visuvasathinal Neethiman Pilaipaan Lyrics