Visheshamanavane endru ennai azhaitheer

விஷேஷமானவனே என்று என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விஷேஷமானவனே என்று என்னை அழைத்தீர்
தனித்துவமானவனாய் என்னை கண்டறிந்தீர் – 2
இந்த உலகம் காணாததேதோ என்னில் கண்டீர்
எந்த உறவும் பார்க்காத விதமாய் என்னை பார்த்தீர் –
விஷேஷமானவன், விலையேற பெற்றவன்
கர்த்தரின் பார்வையில் நான் கிருபை பெற்றவன்
உலகம் தோன்றும் முன்னே என்னை முன் குறித்தீர் – என்
உருவம் தோன்றும் முன்னே கருவில் என்னை கண்டீர் – 2
உம் சாயலாய் உருவாகினேன்,
உம் சுவாசத்தால் உயிர் வாழ்கிறேன் – விஷேஷமானவன்
தாயைபோல என்னை நித்தம் ஆற்றுகின்றீர்
தகப்பன்போல என்னை தோளில் சுமந்து கொண்டீர் – 2
ஒரு நண்பனாய் என்னை தேற்றினீர்
உம் பிள்ளையாய் என்னை மாற்றுனீர் – விஷேஷமானவன்