visaripparra seeyoone thalluntu poona isravele

விசாரிப்பற்ற சீயோனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விசாரிப்பற்ற சீயோனே தள்ளுண்டு போன இஸ்ரவேலே
விசாரிப்பற்ற சீயோனே தள்ளுண்டு என் ஜனமே
உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணுவேன்
உன் காயங்களை ஆற்றுவேன்
அநேகர் அதை கண்டு பயந்து நம்புவார்கள் – 2
அரூக்கா மீண்டும் கட்டினீரே
அரூக்கா என்னை ஜாதியாக்கினீரே
வியாதியான உன் அவயங்களில்
உன் கையை கொண்டே சுகம் தருவார் – 2
உனக்கு எதிரான மந்திரங்களை
உன் கைக்கோலால் விழுங்கிடுவாய்
உனக்கு முன்பான செங்கடல் நேராய்
உன் கோலை நீட்டிடுவாய்
அநேகர் அதை கண்டு பயந்து நம்புவார்கள் – 2
என்னை நீரோ காத்துகொள்வீர்
காத்து சுகமாய் இருக்க செய்வீர் -2
என் சத்துருக்கள் முன்பாக நீர்
பந்தியை ஆயத்தம் செய்திடுவீர்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்திடுவீர்
அநேகர் அதை கண்டு பயந்து நம்புவார்கள் – 2
என் மேல் வைத்த உம் அன்பாலே
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
உந்தனின் ஈடில்லா வல்லமையால்
வாசற் கல் புரண்டோடினதே
இயேசு உயிரோடு எழுந்தீரே
இந்த உலகத்தை ஜெயித்தீரே
சாத்தானை மிதித்து போட்டு
சிலுவையில் வெற்றி சிறந்தீர்
அநேகர் அதை கண்டு பயந்து நம்புவார்கள் – 2