vinnulakai vittu mannulakil – Vinnulagai vittu Mannulagil

விண்ணுலகை விட்டு மண்ணுலகில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விண்ணுலகை விட்டு மண்ணுலகில் – Vinnulagai vittu Mannulagil
விண்ணுலகை விட்டு மண்ணுலகில் வந்த
மன்னனை ஸ்தோத்திரிப்போம் – இந்த
பாரினில் வந்த நம் ஆண்டவர் இயேசுவை (2)
பணிந்து மன்றாடிடுவோம் – என்றும்
போற்றி வணங்கிடுவோம்
விண்ணுலகை விட்டு மண்ணுலகில் வந்த
மன்னனை ஸ்தோத்திரிப்போம்
ஆதியும் அந்தமும் ஆனவரே – எங்கள்
ஒன்றான மெய் தேவனே (2)
உலகத்தின் இரட்சகரே பாவ பரிகாரியே (2)
பரிசுத்தரே உந்தன் பாதம் பணிந்திடுவோம் (2)
விண்ணுலகை விட்டு மண்ணுலகில் வந்த
மன்னனை ஸ்தோத்தரிப்போம்
ஏதேனின் பாவமும் இயேசுவின் தியாகமும்
சிலுவையின் மரணம் இதோ (2)
சிந்திய இரத்தமும் செய்த விண்ணப்பமும் (2)
உயிர்ப்பித்ததோ எம்மை உந்தனின் சாயலில் (2)
விண்ணுலகை விட்டு மண்ணுலகில் வந்த
மன்னனை ஸ்தோத்தரிப்போம் – இந்த
பாரினில் வந்த நம் ஆண்டவர் இயேசுவை (2)
பணிந்து மன்றாடிடுவோம் – என்றும்
போற்றி வணங்கிடுவோம்
விண்ணுலகை விட்டு மண்ணுலகில் வந்த
மன்னனை ஸ்தோத்திரிப்போம்.