1.vinnoorin venthare;

விண்ணோரின் வேந்தரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.விண்ணோரின் வேந்தரே;
மண்ணோரின் மீட்பரே,
மா தேவரீர்,
கேட்டில் என் ரட்சிப்பாய்,
தாழ்வில் என் ஜீவனாய்
விளங்குவீர்.
2.என் பாவத் தீட்டை நீர்
கழுவி நீக்கினீர்,
நல் மீட்பரே;
என் சாபம் தோஷமும்
என் பாவ குஷ்டமும்
நீர் முற்றும் அகற்றும்
அன்பாகவே.
3.பிசாசு பலத்தை
காண்பித்துப் பயத்தை
அகோரமாய்
என்னில் உண்டாக்கினும்,
சகாயராயிரும்;
சாத்தானை அகற்றும்,
மா தயவாய்.
4.நீர் யேசு, ஆகையால்
இம்மேன்மை நாமத்தால்
நான் வெல்லுவேன்;
நீர் ஜோதியானதால்
உம்தன் ப்ரகாசத்தால்
நேர் பாதை செல்வதால்
சந்தோஷிப்பேன்.
விண்ணோரின் வேந்தரே பாடல் வரிகள், Vinnorin Veantharae Lyrics