vinnin maindhan yesu

விண்ணின் மைந்தன் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விண்ணின் மைந்தன் இயேசு
விண்ணுலகை விட்டு இன்று
நம்முள்ளில் வந்துதித்தார்
மனதில் வந்தது மகிழ்ச்சி
என் மன்னன் இயேசு தந்தார்
மனதை கொள்ளை கொண்டார்
என்னை மகனாய் ஏற்றுக்கொண்டார் – ஆ…அல்லேலூயா
1. பாவம் என்னும் இருளை போக்கும்
ஒளியாய் உலகில் வந்தார்
பாவி எம்மை மீட்க
தம்மை பலியாக தந்தார்
சந்தோஷம் சந்தோஷம்
அவரில் கண்டேன் – ஆ…அல்லேலூயா
2. என்மேல் வைத்த அன்பை காட்ட
தம்மை தாழ்த்தி கொண்டார்
அவரில் நிலைத்து நிற்க தாயின்
கருவில் தெரிந்து கொண்டார்
சந்தோஷம் சந்தோஷம்
அவரில் கண்டேன் – ஆ…அல்லேலூயா