vinnil irunthu iraimagan

விண்ணிலிருந்து இறைமகன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விண்ணிலிருந்து இறைமகன்
மனுவாய் மலர்ந்த திருமகன்
உறவாய் உணவானார் நமது நடுவிலே
நமது பாவம் போக்கவே
நாளும் நம்மை மீட்கவே
உணவாய் திடமானார் அப்ப வடிவிலே
1. இதயத்தில் உணவென எழுந்திட்ட மன்னவா
இனி வரும் காலமெல்லாம்
உந்தன் அருளில் வாழுவோம்
பிறந்தாய் எம் இதயம் ஏற்றம்
அடைகிறோம் - உறைந்தாய்
திரு உணர்வாய் மாற்றம் பெறுகிறோம்
2. ஆத்மாவின் தாகமே போக்கிடும் பாலகா
மன்னா பொழிந்தது போல் இந்நாளில் நிரப்புவார்
எழுந்தாய் எம் நடுவில் இன்னல் நீங்குதே
உதித்தாய் எம் உள்ளம் இருளும் அகலுதே