vinnai vittu mannil vanthar

விண்ணை விட்டு மண்ணில் வந்தார்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விண்ணை விட்டு மண்ணில் வந்தார்
மா மன்னர் நமக்காக
விண்ணவர் இயேசு உலகை மீட்க
மனிதன் ஆனாரே
ஆ! என்ன அதிசயம்
எத்தனை பரவசம்
அன்பர் பிறந்தாரே -2
எங்கும் சந்தோசம்
இயேசு பிறந்தார்
எங்கும் கொண்டாட்டம்
ரட்சகர் பிறந்தார் -2
துயரங்கள் நீங்கிற்றே
சமாதானம் பிறந்ததே
துதிகளை பாடியே
தூயனை போற்றுவோம் -2
1.இன்ப பரலோகம் நமக்காய் துறந்தாரே
நீயும் நானும் வாழ நமக்குளே வாழ்கிறார் -2
விண்ணவர் மன்னவர் உமக்கே ஆராதனை -2 – எங்கும் சந்தோசம்
2.இருளாய் தோன்றும் வாழ்வை வெளிச்சம் ஆக்கிட
சுந்தர சூரியன் நமக்குளே உதித்தாரே -2
ஏசுவே என் விடியலே உமக்கே ஆராதனை -2 – எங்கும் சந்தோசம்
3.கண்ணீர் நிறைந்த வாழ்வை களிப்பாய் மாற்றிட
கருணையின் மீட்பராய் நமக்காக பிறந்தாரே -2
ஏசுவே நங்கூரமே உமக்கே ஆராதனை -2 – எங்கும் சந்தோசம்
விண்ணை விட்டு மண்ணில் வந்தார் பாடல் வரிகள், Vinnai Vittu Mannil Vanthaar Lyrics