Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics

வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு பதிலாக
நிந்தைக்கு பதிலாக மகிழ்ச்சியாக்கினீர் -(2)
நன்றி சொன்னாலும் போதாதையா வாழ்நாளெல்லாம் தீராதையா
நன்றி சொல்ல வார்த்தை இல்லை – உமக்கு (2)
மனுஷ வார்த்தையால உடஞ்சி போயிருந்தேன் உங்க வார்த்தையால தூக்கி சுமந்திங்க -(2)
தூக்கி விட ஒருவர் இல்ல தாங்கிட எவருமில்லை உங்களத்தான் நம்பி இருக்கேன் வேற யாரும் தேவையில்லை (இல்லை)-2
நெருக்கத்தின் பாதையில நொறுங்கிப் போயிருந்தேன் நெருக்கமாய் வந்து என்னை ஆசீர்வதிச்சீங்க-(2)
என் வாழ்க்கை முடிஞ்சதென்று
நான் நினைச்ச வேளையிலே நான் இருக்கேன் என்று சொல்லி கைபிடிச்ச நேசர் நீங்க (நீர்) -(2)
மனங்கசந்து அழுதபோது கைப்பிடிச்சீங்க ஒன்றுமில்லா வேளைகளில் உதவி செஞ்சீங்க -(2)
குப்பையில் கிடந்த என்னை கன்மலையில் நிறுத்தினீங்க
என் கால்கள் சறுக்கும் போது உம் கிருபை தந்தீங்க
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya