Vetkapaduvathillai

வெட்கப்படுவதில்லை நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வெட்கப்படுவதில்லை
நான் கைவிடப்படுவதில்லை
கொன்றுப் போட்டாலும்
தேவா உம்மை நான் விடுவதில்லை
உம்மை நான் விடுவதில்லை
சிலுவையை நான் சுமந்தாலும்
சிங்காசனம் தான் எனக்கு உண்டு
சிறுமைப்படுத்தி தாழ்த்தினாலும்
தேவ சமாதானம் என்றும் உண்டு
என்றும் இயேசுவையே
நம்பி வாழ்ந்திடுவேன்
நன்மை அடைந்திடுவேன்
பாடுகள் நான் பட்டாலும்
பரிசுத்தம் தான் எனக்கு உண்டு
நாட்கள் கடந்து ஓடினாலும்
கர்த்தரின் நன்மை என்றும் உண்டு
என்றும் இயேசுவையே
நம்பி வாழ்ந்திடுவேன்
நன்மை அடைந்திடுவேன்
சோதனைகள் சூழ்ந்தாலும்
சோர்ந்து நானும் போவதில்லை
சென்றவர் வருவார் சொன்னதை செய்வார்
பரலோக வாழ்வு எனக்கு உண்டு
என்றும் இயேசுவையே
நம்பி வாழ்ந்திடுவேன்
நன்மை அடைந்திடுவேன்
வெட்கப்படுவதில்லை
நான் கைவிடப்படுவதில்லை