vetha thayai nirai thatha – Vedha Thayai Nirai Thatha

வேதா தயை நிறை தாதா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வேதா தயை நிறை தாதா – Vedha Thayai Nirai Thatha
பல்லவி
வேதா, தயை நிறை ‘தாதா, ஏசு
நாதா, அருள் தா.
அனுபல்லவி
போதா, மனுடர்கள் புரி பவம் அற, ‘நரனாய்த் தீயன்
போலே துயர் அடைந்துமா தயை
யாலே மரித் தெழுந்த தேவனே,
சரணங்கள்
1.என்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ, பரனே?-ஏழைக்
கேது துணை உன்தன் ‘தாரகம் அன்றி, தற்பரனே?
வந்தடைந்தனன் உன்தனை; அன்பு
தந்தரவணைத் தென்தனைத் தய
வாக ‘உரு பவம் அடங்கலும்,
போகத் ‘துய்யன் ஆகவே என்றும்,
2.பாவம தென்தனை மேவிக் கெடுத்ததே, தேவா;-உன்தன்
பற்ற தல்லா தினி உற்றதுணை இல்லை, கா, வா,
சாவுவரில் என் ஆவி கலங்கித்
தவித்திடாமலே களித்து; நன்மன
தாகப் ‘பர கதியை நோக்கி அங்
கேக, நித்திய பாகம் அடைய,