verri tharum jepamalai – Vettritharum Jebamalai Annai

வெற்றி தரும் ஜெபமாலை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

வெற்றி தரும் ஜெபமாலை – Vettritharum Jebamalai Annai
வெற்றி தரும் ஜெபமாலை அன்னை
கற்று தந்த ஜெபமாலை -2
ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை ஜெபிப்போம்
துதிப்போம் துதிப்போம் துயர் நீங்க துதிப்போம் – 2
பரலோகத்தில் இருக்கும் நமது தந்தையை
தொழுது தொடங்கும் ஜெபமாலை – அவள்
பரிவுடன் நம்மை மீட்டு அருள் புரியும்
மறையுரையே ஜெபமாலை – 2
அருள்நிறை மரியே அருள்நிறை மரியே
என்று வேண்டும் ஜெபமாலை – 2 பிள்ளை
குரல்கேட்டு அன்னை விரைந்து வந்து
அரவணைக்க செய்யும் ஜெபமாலை – 2
மூவொரு இறைவனை மீண்டும் மீண்டுமாய்
துதித்து துலங்கும் ஜெபமாலை – இங்கு
யாவரும் வேண்டும் அமைதியும் அன்பும்
தந்திடுமே ஜெபமாலை – 2
அறிந்தும் அறியாது புரிந்த பாவப் பரிகாரம்
செய்யும் ஜெபமாலை – 2 நாம்
விசுவாசத்தோடு வளர்ந்தோங்கி வாழ்வு
பரிசு அடையச்செய்யும் ஜெபமாலை – 2