veesitum karre nee thirumpip poo – Veesidum Katre Nee Thirumbi

வீசிடும் காற்றே நீ திரும்பிப் போ
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

வீசிடும் காற்றே நீ திரும்பிப் போ – Veesidum Katre Nee Thirumbi
தொகையறா :
வீசிடும் காற்றே நீ திரும்பிப் போ
சுற்றிடும் பூமியே நீ நின்று போ
கரை தொடும் கடலே நீ வற்றிப்போ
உலகம் இதோ இங்கு மயானம் ஆனதே
பல்லவி :
இனி யாரை நம்பி நான் வாழ்வது?
என் தோழன் இதோ சிலுவையிலே
இனி எப்படி தான் நான் வாழ்வது?
என் பலம் இதோ வீழ்ந்து போனதே
அன்பு செய்து வாழ்ந்தவரை
மன்னித்து வாழ சொன்னவரை
ஆணிகள் தாங்குவதை பார்த்தாயோ – 2 (இனி)
சரணம் :
கொலைப்பழி சிலுவை சாவு
யாருக்காக மானிடா
குற்றமில்லா செம்மறி இன்று கொலையுண்டு போனதே (2)
சாட்டையடி
அகோரக் கோலம்
யாருக்காக மானிடா
இரத்தமெல்லாம் வற்றிப்போக
ஜீவன் விட்டுப் போனதே
தியாகத்தின் சிகரம் இன்று மூச்சடைத்து போனதே