vazhnthirukkavum theriyum enakku

வாழ்ந்திருக்கவும் தெரியும் எனக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாழ்ந்திருக்கவும் தெரியும் எனக்கு
தாழ்ந்திருக்கவும் தெரியும்
நிறைவுற்று வாழ்ந்தாலும்
குறைவுற்று தாழ்ந்தாலும்
மன ரம்யமாக இருந்திடுவேன்
நான் இயேசுவின் பின் செல்லுவேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
எதை குறித்தும் நான்
கவலைகொள்ளாமல்
எல்லாவற்றையும்
அவரிடம் சொல்லுவேன்
புத்திக்கு எட்டிடாத
தேவ சமாதானம் தந்திடுவார்
நான் இயேசுவின் பின் செல்லுவேன்
திரும்பி பார்க்க மாட்டேன்.
ஐஸ்வர்யத்தின் தேவன்
எந்தன் குறைவுகளை
இயேசு கிறிஸ்துவுக்குள் நிறைவாக்குவார்
மனுஷரின் தயை நாடிடேன்
மனுகுமாரனின் முகம் தேடுவேன்
நான் இயேசுவின் பின் செல்லுவேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
பெலப்படுத்துகிற கிறித்துவினாலே
எல்லாவற்றையும் நான் செய்திடுவேன்
உபத்திரவம் வந்தாலுமே
உலகத்தின் பெலம் நாடிடேன்
நான் இயேசுவின் பின் செல்லுவேன்
திரும்பி பார்க்க மாட்டேன்